
Sahaya Madha Church
ஆலய வரலாறு
1984-ஆம் ஆண்டு மகாலட்சுமி நகர் புனித சூசையப்பர் பங்கு உருவானது. அருட்தந்தை. தேவசியா பங்குத்தந்தையாக பணியாற்றினார். 1901ஆம் ஆண்டு அருட்தந்தை. சிரியாக் இல்லமுட்டில் (பங்குதந்தை சூசையப்பர் ஆலயம் மகாலட்சுமி நகர்) அவரின் முயற்சியால் திரு.அலெக்ஸ் (அருட்தந்தை பெர்னார்ட் லாரன்ஸ் அவர்களின் தந்தை ஆதரவோடு 1992ஆம் ஆண்டு நவம்பர் 24ஆம் நாள் ஆலயம் கட்ட இடம் வாங்கப்பட்டது. குடிசை கோவில் அமையும் வரை அவர்களின் இல்லத்தில் அருட்தந்தை. சிரியாக் இல்ல முட்டில் திருப்பலி நிறைவேற்றினார். பின்பு 1996ஆம் ஆண்டு இறைமக்களின் ஒத்துழைப்போடு சகாய அன்னைக்கு குடிசை கோவில் கட்டப்பட்டது. 1996ஆம் ஆண்டு அக்டோபர் திங்கள் முதன்முதலாக மிகச்சிறப்பாக அன்னைக்கு திருவிழா கொண்டாடப்பட்டது. 1997-ல் மகாலட்சுமி நகர் அருட்தந்தை. டானியேல் ஜெயசிங் (C.S.S.R) பங்குத்தந்தை யாகவும், அருட்தந்தை. ஜேசுதாஸ் உதவி பங்குத்தந்தையாகவும் பணியாற்றினார்கள். 1999-ஆம் ஆண்டு ஆலயத்தின் முன்புறத்தில் மதில்சுவரும், கொடிக்கம்ப மேடையும் கட்டப்பட்டது. 2001ஆம் ஆண்டு அருட்தந்தை ஜார்ஜ் பாலக்காட்டுகுண்ணல் அவர்களின் பெரும் முயற்சியால் 2002ஆம் ஆண்டு ஆலயத்திற்கு பின்புறம் உள்ள இடம் விலைக்கு வாங்கப் பட்டது. இந்த இடத்தில் தான் தற்போது செயின்ட் ஜோசப் பள்ளி இயங்கி வருகிறது. 2002 ஆம் ஆண்டு மே மாதம் அருட் தந்தை எஸ்தாக்கியூஸ் உதவி பங்குத் தந்தையாக பொறுப்பேற்றார்கள். 2003ஆம் ஆண்டு மே திங்கள் 24-ம் நாள் அருட்தந்தை அலெக்சிஸ் மனோகர் அவர்கள் வழிகாட்டி தந்தையாக பொறுப்பேற்றார். அதன் பின் புதிய சிற்றாலயம் அருட்தந்தை ஜார்ஜ் பாலக்காட்டுகுண்ணல் அடிகளாரின் உதவியால் கட்டி முடிக்கப்பட்டது. 19.09.2003-ல் இவ்வாலயம் மேதகு ஆயர் நீதிநாதன் அவர் களால் அர்ச்சிக்கப்பட்டு இறை மக்களை கட்டி எழுப்பும் பணி அருட்தந்தை அலெக்சிஸ் மனோகர் அவர்களிடம் ஒப்படைக்கப்பட்டது. மக்களின் அன்றாட ஜெபத்தாலும், இந்து சமயத்தை சார்ந்த சிறுமிக்கு நடந்த புதுமை மற்றும் அன்னையைத் தேடி வந்தவர்களுக்கு நடந்த புதுமையாலும், ஆலயத்தை அனைத்து மக்கள் புனித சகாய அன்னை ஆலயம் என்று அருட்தந்தை அலெக்சிஸ் மனோகர் அறிவித்தார். 2004-ஆம் ஆண்டு மே திங்கள் 30 ஆம் நாள் செங்கல்பட்டு மறை மாவட்ட ஆயர் மேதகு நீதிநாதன் அவர்கள் மேடவாக்கம் அனைத்து மக்கள் புனித சகாய அன்னை ஆலயத்தை தனிப் பங்காக அறிவித் தார்கள். அருட்தந்தை அலெக்சிஸ் மனோகர் பங்குத்தந்தையாக தேர்வு செய்யப்பட்டார். புதிய பங்கு பேரவை, வழிபாட்டுக் குழு, அன்பியங்கள், இளையோர் குழு, பாடகர் குழு புதிதாக உருவாக்கப்பட்டது. மேலும், ஏற்கனவே பங்கில் இயங்கி வந்த மரியாவின் சேனை மற்றும் வின்சென்ட்-தே- பவுல் சபை புதுப் பொலிவு பெற்று இயங்கத் தொடங்கின. பங்குத் தந்தை அவர்கள் ஆன்மீக பாதையில் மக்களை சிறப்பாக வழிநடத் தினார்கள். 2004-ஆம் ஆண்டு ஜூன் திங்கள் அப்போதைய ஆலயத்தை ஒட்டி உள்ள அறையில் செயின்ட் ஜோசப் ஆங்கில வழிக் கல்வி கற்பிக்க வழிவகை செய்யப்பட்டது. பங்குத் தந்தையின் பெரும் முயற்சியால் அரசின் உரிய அங்கீகாரத்தோடு மெட்ரிகுலேஷன் பள்ளியாக மாற்றமடைந்தது. 22.05.2005 பங்குத் தந்தைக்கு இல்லம் கட்டப்பட்டு ஆயர் அவர்களால் திறந்தும் வைக்கப்பட்டது. 2005-ஆம் ஆண்டு நவம்பர் திங்கள் 16-ஆம் நாள் SMI அருட் சகோதரி களுக்கு இல்லம் அமைக்கப்பட்டு, மேடவாக்கம் பங்கில் பணி செய்யவும் ஆரம்பித்தார்கள். 2006-ஆம் ஆண்டு பிப்ரவரி 24ஆம் நாள் திரு குடும்ப ஆலய மணிக்கூண்டு கட்டப் பட்டது. 2008-ஆம் ஆண்டு மே திங்கள் முதல் வாரத்தில் ஆயர் அவர்கள் ஆலயம் கட்ட அனுமதி வழங்கினார்கள். பின்பு அருட்பணி. L. ஜான் பெஞ்சமின் அவர்கள் 2009 ஆம் ஆண்டு மே மாதம் புதிய பங்கு தந்தையாக பொறுப்பேற்றுக் கொண்டார்கள். 2010ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் 21ஆம் நாள் திருத்தந்தையின் சிறப்பு தூதுவர் பேராயர் மேதகு. ஜார்ஜ் அந்தோணிசாமி (தற்போதைய மயிலை ஆயர்) மேடவாக்கம் அனைத்து மக்கள் புனித சகாய அன்னை ஆலயத் தின் கட்டுமான பணிக்கான அடிக்கல்லை அர்ச்சித்து நாட்டினார்கள். மாதத்தின் ஒவ்வொரு 24ஆம் தேதியும் நவநாள், தேர் பவனி, திவ்ய நற்கருணை ஆசீர், திருப்பலி மற்றும் குணமளிக்கும் எண்ணெய் பூசுதல் நடைபெறும். அதன்பின் அன்பின் விருந்து கொடுக்கும் திட்டமும் தொடங்கப்பட்டது. பஞ்சாயத்து தலைவர் U. ரவி அவர்களின் உதவியோடு அருட்தந்தை ஜான் பெஞ்சமின் அவர்கள் பெரும் முயற்சி செய்து அரசின் உரிய அங்கீகாரம் பெற்று யோசேப்பு மெட்ரி குலேஷன் பள்ளியை மேல்நிலைப் பள்ளியாக தரம் உயர்த்தினார்கள். மேடவாக்கத்தில் அனைத்து மக்கள் புனித சகாய அன்னைக்கு புதிய ஆலயம் கட்டுவதற் காக மேதகு ஆயர் நீதிநாதன் அவர்களின் அதிகாரப்பூர்வ அனுமதி பெறப்பட்டது. 2013-ஆம் ஆண்டு நவம்பர் மாதம் செங்கை மறை மாவட்ட மேய்ப்பு பணி நிலைய இயக்குனர் தந்தை அருட்பணி, செபஸ்தியான் ஜார்ஜ் புதிய ஆலயம் கட்டுவதற்கான அனுமதியை அதிகாரப்பூர்வமாக அறிவித்தார்கள். அம்மாதமே ஆலய பணிகள் துவங்கப்பட்டு தொடர்ந்து நடைபெற்று வந்தது. திருப்பலி நிறைவேற்றுவதற்காக ஒரு சிறிய கொட்டகை யும் அமைக்கப்பட்டது. 2016-ஆம் ஆண்டு ஜூன் திங்கள் 15ஆம் நாள் புதன்கிழமை மக்கள் புடை சூழ மேதகு ஆயர் நீதிநாதன் அவர்கள் ஆலயத்தை அர்ச்சித்து புனிதப்படுத்தி திறந்து வைத்தார்கள். 2016-ஆம் ஆண்டு ஜூன் இருபதாம் நாள் அழகாய் வானுயர 53 அடி உயரத்தில் கொடிக் கம்பமும் அமைக்கப்பட்டு அர்சிக்கப்பட்டது. 2016 ஜூன் 21ஆம் தேதி புனித லூர்து அன்னை திருச்சொரூபமும், ஜூன் 23-ம் தேதி ஆயர் தேவதாஸ் அம்புரோஸ் அவர்களால் சிலுவைப்பாதை நிலைகளும் அர்ச்சிக்கப்பட்டு புனிதப்படுத்தப்பட்டது. 2016-ஆம் ஆண்டு பங்குத்தந்தை ஜான் பெஞ்சமின் மாற்றலாகி புதிய பங்கு தந்தையாக அருட்பணி G. காணிக்கைராஜ் பொறுப்பேற்றுக் கொண்டார்கள். பங்குத்தந்தை G காணிக்கைராஜ் அவர்கள் அன்னைக்கு திருக்காட்சி பீடமும் ஆலய வளாகத்தின் முன் பகுதியில் நற்கருணை சிற்றாலயத்தையும் கட்டினார்கள். பங்கின் மாத இதழாக நம் குடும்பமும் வெளியிடப்பட்டது. பங்குத்தந்தை G. காணிக்கைராஜ் மாற்றலாகி அருட்பணி ரா. லூக்காஸ்ராஜ் அவர்கள் பங்குத் தந்தையாக 2022-ஆம் ஆண்டு பொறுப்பேற்றுக் கொண்டார்கள். 2024-ஆம் ஆண்டு புனித ஜோசப் மேல்நிலைப் பள்ளியின் தாளாளராக அருட்தந்தை ரா. லூக்காஸ்ராஜ் அடிகளாரும், பங்கிற்கு புதிய பங்குதந்தையாக அருட்பணி. முனைவர் C.பவுல்ராஜ் அவர்களும் பொறுப் பேற்றுக் கொண்டார்கள். இனிமை மிகு குரல் வளத்தாலும், சிறந்த மறையுரையாலும் மக்களை ஆன்மீகத்தில் ஆழப்படுத்திக் கொண்டிருக் கிறார்கள். மேலும் புதிய பக்திமுயற்சியாக முதல் சனி துன்ப முடிச்சுக்களை அவிழ்க்கும் அன்னைக்கு நவநாள் மற்றும் பல்வேறு பக்தி முயற்சிகளால் மக்களை அன்னையை நோக்கி நாடி வர செய்து கொண்டிருக்கின்றார்கள். தந்தையின் வழியாக அன்னையின் அருள் அனைவருக்கும் நிறைவாக கிடைக்கட்டும்.
Lorem ipsum dolor sit amet, consectetur adipiscing elit. Ut elit tellus, luctus nec ullamcorper mattis, pulvinar dapibus leo.